×

தெலங்கானா மாநிலத்தில் உலகின் முதல் 3டி பிரின்டிங் தொழில்நுட்ப கோயில்: இன்று முதல் பக்தர்கள் வழிபட அனுமதி

திருமலை: தெலங்கானா மாநிலம் பூருக்கபள்ளியில் அமைந்துள்ள உலகின் முதல் 3டி பிரின்டிங் தொழில்நுட்ப கோயிலை பக்தர்கள் இன்று முதல் தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டம் பூருக்பள்ளியில் அதிநவீன தொழில்நுட்ப கட்டிடக்கலையாக 3 டி பிரின்டிங் தொழில்நுட்பம் உதவியுடன் 35.5 அடி உயரமும் 4,000 சதுர அடி பரப்பளவும் கொண்டு 3டி கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதில் விநாயகர், சிவன் பார்வதி, சன்னதி இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பக்தியில் பிரமிக்க வைக்கும் வகையில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் முதல் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கோயில் பொதுமக்களின் வழிபாட்டிற்கு இன்று முதல் அனுமதிக்கப்பட உள்ளது. ‘இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே முதல் 3டியில் பிரின்டிங் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட கோயில் இதுவாகும்.

 

The post தெலங்கானா மாநிலத்தில் உலகின் முதல் 3டி பிரின்டிங் தொழில்நுட்ப கோயில்: இன்று முதல் பக்தர்கள் வழிபட அனுமதி appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Purukkapalli ,
× RELATED தெலங்கானா மாநிலத்தில் தேர்தல்...